பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனில் யார் வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது என்றே சொல்லலாம். அதற்கான காரணம் மஹத் நாமினேஷனில் இடம் பெற்று இருப்பது தான்.
எப்படியாவது மஹத் இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற வேண்டும். எக்காரணத்தை கொண்டும் மஹத்தை பிக் பாஸ் காப்பாற்றி விட கூடாது என ரசிகர்கள் அனைவருமே கூறி வருகின்றனர். தற்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.
ஆம், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மஹத் தான் வெளியேறியுள்ளார். நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் மக்களிடமே யாரை கேள்வி கேட்க வேண்டும் என கேட்க அரங்கமே மஹத் பெயரையும் ஐஸ்வர்யா பெயரையும் உச்சரித்து.
இதனையடுத்து கமல்ஹாசனும் வாக்கு கொடுத்த படியே தாளித்து எடுத்து விட்டார். மேலும் மக்களிடம் கமல்ஹாசன் யார் சேப் என்பதை கூட நேற்று கூறவில்லை. அதிக ஓட்டுகளுடன் மும்தாஜ் தான் சேப்பாகி உள்ளார் என்பது நேற்று அவர் பேசும் போது அரங்கத்தை அதிர வைத்த ரசிகர்களின் குரலே சாட்சி.
மேலும் டேனி மஹத் செய்த தவறான விசயங்களை பற்றியும் அவர் தாக்கியதையும் பற்றியும் குற்றம் சாட்டி இருந்தார். மஹத்தும் இருக்கும் 30 நாட்களில் தன்னை திருத்தி கொள்வேன் என கூறியிருந்தார். ஆனால் அதற்கெல்லாம் மக்கள் வாய்ப்பு கொடுக்காததால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் இந்த வாரம் தான் நிகழ்ச்சியை சரியாக பார்த்து விட்டு சரியாக நடந்துள்ளார் எனவும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.