பிரபல தொலைக்காட்சியில் நீண்டகாலம் நடந்துவரும் நிகழ்ச்சி நீயா நானா. இதில் ஒவ்வொரு வாரமும் தலைப்பில் வாதம் நடைபெறும்.
சமூகத்தில் அதிகம் விவாதிக்கப்படாத தலைப்புகளை எடுத்து பேசுவார்கள். அந்தவகையில் இந்த வாரம் மனைவியின் வயது கணவனை விட அதிகம் இருக்கலாமா, கூடாதா என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
இதில் ஒரு பெண் தன் கணவனின் வயது 2 மாதம் அதிகம் என்று பேசிக்கொண்டிருந்தார்.
திடிரென அந்த பெண்ணிடம் உங்கள் கணவரின் சான்றிதழை சரிபார்த்தபோது அவர் உங்களை விட 2 மாதம் குறைவானவர் தான் என்று உறுதியாக சொன்னார்.
இதை கேட்ட ஷாக்கான அந்த பெண் வாய்ப்பில்லை என்று சொன்னாலும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.
பின்னர் கோபிநாத் சும்மா தான் சொன்னேன். அவர் உங்களை விட மூத்தவர் தான் என்று சொல்லி ஆசுவாசப்படுத்தினார்.