பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் மஹத் இன்று வெளியேற்றப் பட்டார். அவருக்கு ரெட் கார்டு காட்டி நடிகர் கமல் வெளியில் வர சொன்னார்.
இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் மஹத்தை கட்டிதழுவி விடை கொடுத்தனர். இதுநாள் வரை அவரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்த டேனி மற்றும் மும்தாஜூம் கூட அவரிடம் நன்றாகவே பேசினர்.
மஹத் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நடிகை யாஷிகா ஸ்மோக்கிங் ரூம் உள்ளே சென்று கதறி அழுதார். இதுநாள் வரை இப்படி அழுது பார்த்ததில்லை என்பதால் ஐஸ்வர்யா அவரை மிகவும் கஷ்டப்பட்டு தேற்றினார்.
மற்ற போட்டியாளர்கள் யாஷிகா இப்படி செய்தது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.