ராகம வைத்தியசாலையில் கணவர் ஆபத்தான நிலையில் இருப்பதனை பார்த்து மனைவி ஒருவர் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திடீர் சுகயீனமடைந்த கணவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடியுள்ளார்.
இதனை பார்த்த மனைவி உடனடியாக சுகயீனமடைந்துள்ளார். சுகயீனமடைந்தவர் அதே வைத்தியசாலையின் வேறு அறையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்து 3 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன்னர் மனைவி உயிரிழந்துள்ளார்.
சுகயீனமடைந்த கணவனை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக கடந்த 24ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் மகன்கள் இருவருடன், அங்கு மனைவி சென்றுள்ளார்.
கணவர் சிகிச்சை பெற்ற போது, மனைவியும் 18ஆம் அறையில் அனுமதிக்கப்பட்டார். 25ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் கணவர் உயிரிழந்துள்ளார்.
அவர் உயிரிழந்து 3 மணித்தியாலங்களில், மனைவியும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், 5 பிள்ளைகளின் தந்தை தாய் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தம்பதியரின் பாசத்தை கண்டு வைத்தியசாலையிலுள்ள அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தாக தெரிய வருகிறது.