கொழும்பை சுற்றி வளைக்க தயாராகும் மஹிந்த படை!

கொழும்பை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு நகரை சுற்றிவளைத்து எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா மற்றும் மாகாண சபை உறுப்பினர் உப்பாலி கொடிக்கார இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.