அவுஸ்திரேலியாவில் உயர் விருதை வென்ற இலங்கைப் பெண்….

அவுஸ்திரேலியாவில் இலக்கியத்துக்கான உயர் விருதை இலங்கையில் பிறந்த எழுத்தாளர் ஒருவர் பெற்றுள்ளார்.

ஆசிய குடியேறிகளில் முதல் பரம்பரையை சேர்ந்த மிச்செய்ல் டி கிரெஸ்டர் என்ற பெண்ணுக்கே இந்த விருது கிடைத்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு நேற்று மெல்போனில் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் குறித்த விருதைப்பெறும் மூன்றாவது பெண்ணாக கிரெஸ்டர் தெரிவாகியுள்ளார்.

சுமார் 60 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான இந்த விருது 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.