இன்று கூடுகிறது சம்பள மீளாய்வு ஆணைக்குழு!

அரச சேவையினரின் சம்பள மீளாய்வு தொடர்பான விசேட ஆணைக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முதல் முறையாக கூடவுள்ளது.

இந்த ஆணைக்குழுவிற்கு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரச நிர்வாக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியான எஸ்.ரணுக்கே இதன் தலைவராக செயற்படுகிறார்.

அரச சேவை கட்டமைப்பை மதிப்பீடு செய்து புதிய சம்பள கட்டமைப்பை தயாரிப்பதே ஆணைக்குழுவின் நோக்கமாகும். இது தொடர்பாக ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு இன்று தெளிவுபடுத்தப்படவுள்ளது.

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாட்டை நீக்கி தேசிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியினால் இன்று நியமன கடிதங்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.