மிருகங்களின் உலகம் மிகவும் சிறியது. அதுவும், வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப் பிராணிகள், மனிதர்களை அதிகம் எதிர்பார்ப்பவை. அவை மனிதர்களிடமிருந்து, கவனிப்பையும் அன்பையும் எதிர்பார்க்கின்றன. அதேசமயம், அவை தன்னை வளர்த்து உணவளிப்பவர்களுக்கு காட்டும் பதில் மரியாதையும், அன்பும் தனி ரகம். அதிலும், நாய்கள் அதில் மிகவும் முக்கியமானவை.
பொதுவாக செல்லப்பிராணிகளை வளர்ப்பது காரணம் நம் குழந்தைகள் செல்லப்பிராணிகளுடன் பாசம் காட்டி விளையாட வேண்டும் என்பதற்காகவும். வீட்டின் பாதுகாப்புக்கும் செல்லம்மாக வளர்கிறோம். ஆனால் நாய்கள் மனிதர்களிடம் மிக அன்போடு நன்றியோடு பழகக்கூடியவை. அவைகளுக்கும் குழந்தைகளைப் போல் அன்பு தேவை. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செல்லப்பிராணிகளை தூர விலக்கும் போது அவைகள் மனதுக்குள் வருத்தப்படும். அதுவே குழந்தைகள் மீது அவைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் வளர்ப்பு பிராணிகள் மீதும் பாசம் செலுத்துங்கள்.
செல்லப்பிராணிகள் ஐந்து அறிவு படைத்தாலும் இறைவன் அவை மனிதன் அன்பை விட மிஞ்சிய அளவிற்கே மனிதர்களிடம் பாசமாக இருக்கிறது.
குறித்த காணொளியில் விலங்கினங்களானது மனிதர்களிடம் வைக்கும் அன்பு மனதை நெகிழ வைக்கிறது. அப்படி பாசத்தை காட்டி வெகுளிதனமாக அவை செயல்படுகிறது. என்ன அற்புதமான காட்சியை நீங்களும் பாருங்க பாசத்தில் தன்னை மறந்து போய்விடுவீர்கள்.