மணமகளின் மனதை வாட்டிய பழைய காதலன்: எடுத்த அதிர்ச்சி முடிவு

புதுச்சேரியில் 30 ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தனக்கு மணமகன் பிடிக்கிவில்லை எனக்கூறி தனது காதலனுடன் சென்று பதிவு திருமணம் செய்துகொண்டார்.

புதுச்சேரியை சேர்ந்த அழகம்மை என்ற மாணவி நர்ஸிங் படித்து வருகிறார். அழகம்மைக்கும், அவருடைய உறவினரின் மகனுக்கும் திருமணம் செய்ய அவர்களின் பெற்றோரால் முடிவு செய்யப்பட்டு வருகிற 30–ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இரு வீட்டாரும் திருமண வேலைகளை செய்து வந்தனர்.

சம்பவத்தன்று அழகம்மை கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் மாயமான மாணவி அழகம்மை அதே பகுதியைச் சேர்ந்த ஐ.டி.ஐ. படித்த ஜான் என்ற வாலிபருடன் காவல் நிலையத்துக்கு வந்து தஞ்சம் அடைந்தார்.

அப்போது அழகம்மை வாலிபர் ஜானை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் பார்த்து முடிவு செய்த மாப்பிள்ளை பிடிக்காததால் வீட்டைவிட்டு வெளியேறி காதலனை பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் பொலிசாரிடம் தெரிவித்தார்.

மாணவி அழகம்மையையும், அவருடைய காதலனையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது மாணவி அழகம்மை தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜானுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்ததை தொடர்ந்து அழகம்மை மேஜர் என்பதால் காதல் கணவருடன் செல்ல அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.