எனது சிறந்த அண்ணன், விஜய்க்கு ராக்கி கட்டிய பிரபல நடிகை.!

தமிழ் சினிமாவில் வனமகன் படத்தின் மூலம் நடிகை சாயிஷாவை அறிமுகம் செய்தவர் இயக்குனர் விஜய் .மேலும் அதைத் தொடர்ந்து நடிகை சாயிஷா இயக்குனர் விஜய்யுடன் நட்பாகவும், சகோதரரை போலவும் பழகி வந்தார்.

மேலும் அது மட்டுமின்றி அவரது அனைத்து பேட்டிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தனது சகோதரர் என்றே கூறி வந்தார்.

இந்நிலையில் நேற்று ரக்ஷா பந்தனுக்கு ஆயிஷா தனது சகோதரனாக நினைக்கும் விஜய்க்கு ராக்கி கட்டினார். மேலும் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.

அதில் அனைவருக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள், என்னுடைய எப்பொழுதும் சிறந்த சகோதரனான விஜயுடன்,மதிய நேரத்தை சிறப்பாக செலவிட்டேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.மேலும் ஒரு சகோதரர் எப்போதுமே நமக்காக இருக்கிறார் என்பது ஒரு சிறந்த உணர்வு என பதிவிட்டிருந்தார்.