முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு அமைச்சர் மங்கள சமரவீர சென்றுள்ளார்.
இதன்போது மஹிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் சகோதரரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்கில் மங்கள அங்கு சென்றுள்ளார்.
இங்கு முன்னாள் ஜனாதிபதியுடன் உரையாடியவர், கோத்தபாயவுடனும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.
ராஜபக்சர்களை திருடர்கள், கொலைக்காரர்கள் என குற்றம் சாட்டும் அமைச்சர், அவர்களை சந்தித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று சாடியுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜபக்சர்கள் குறித்து தொடர்ந்து குற்றம் சுமத்தும் மங்கள, தற்போது அங்கு சென்று நட்புறவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.