உடல் எடையை குறைக்க டயட், உடற்பயிற்சிகள் என செய்து வந்தாலும் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்து இங்கு காண்போம்.
நமது உடல் எடையை குறைக்க நினைத்தாலும், சிலவகை உணவுப் பொருட்கள் அதனை தடுத்துவிடுகின்றன.
சமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிகளவில் உள்ளது. மேலும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவாக உள்ளது. எனவே இது உடலினுள் அழற்சியை ஏற்படுத்தும்.
- எண்ணெயில் பொரித்த உணவுகள், Packing செய்யப்பட்ட உணவுகள், Packet உணவுகள், Fast Food ஆகியவற்றில் கெட்ட கொழுப்புகள் அதிகமாக இருக்கும். இவை உடலில் உள்ள நல்ல கொழுப்புகளின் அளவை குறைக்கும். அத்துடன் அழற்சியை ஏற்படுத்தி எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் உண்டாக்கும்.
- எடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும்போது பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சிகளில் உள்ள Neu5Ge, இதயநோய், புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும். அத்துடன் உடல் பருமனையும் உண்டாக்கும்.
- உணவில் சிறிது சர்க்கரையை சேர்ப்பதனால் நீரிழிவு, பற்சொத்தை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும். சர்க்கரை சேர்க்காமல் ஜூஸ், சோடா, மில்க் ஷேக் போன்றவற்றை குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையினால் உடல் எடை அதிகரிக்கும்.
- சுத்திகரிக்கப்பட்ட மாவுகளில், குறிப்பாக மைதா மாவுகளினால் செய்யப்படும் உணவுப் பொருட்களும் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும்.