இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய நாற்காலி! ஒன்று இத்தனை இலட்சமா?

மேல் மாகாண சபையின் புதிய கட்டடத்திற்காக புதிய நாற்காலி கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக கதிரைகளை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க தலா 640000 ரூபா செலவில் நாற்காலிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விலைமனு கோரலுக்கமைய இலங்கை நிறுவனம் ஒன்று இந்த நாற்காலியை முன்பதிவு செய்துள்ளது. எனினும் பெல்ஜியத்தில் இந்த நாற்காலி தயாரிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் இந்த நாற்காலியின் பெறுமதி 6 லட்சத்து 40000 ரூபாய் என கூறப்பட்டது. எனினும் நாற்காலியின் உண்மையாக பெறுமதி 2 லட்சம் ரூபா எனவும், மேலதிக கட்டணம் வரி எனவும் தெரியவந்துள்ளது.

360 பாகையில் சுற்ற கூடியதே இந்த நாற்காலி, தேவையான முறையில் அதனை மாற்றி கொள்ள முடியும் என்பது சிறப்பம்சம்

எப்படியிருப்பினும் சர்ச்சைக்குரிய இந்த கொடுக்கல் வாங்கல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.