யாழ்ப்பாணத்திற்கு மிக அருகில் உச்சம் கொடுக்கும் சூரியன்!

இலங்கையின் நடுப்பகுதியின் ஊடாக சூரியன் பயணிக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

இன்று பகல் 12.11 மணியளவில் யாழ். மாவட்டத்தின் கோண்டாவில், நாவற்காடு உட்பட சில பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.வருடத்தின் இரண்டு முறை சூரியன் இலங்கை மிக அருகில் பயணிக்கும். ஏப்ரல் மாதத்தில் நாட்டை சுற்றி காற்றின் வேகம் குறைவாக இருப்பதனால் ஏப்ரல் மாதத்தில் சூரியன் உச்சம் கொடுக்கும்.

ஆகஸ்ட் மாதத்திலும் இதே நிலைமை காணப்படும்.இதனால் கடுமையான வெப்ப நிலைமை ஒன்றை உணர முடியும் என திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.