புலிக்குட்டி, சிங்ககுட்டிகளுடன் விளையாடும் நாய்க்குட்டி… வைரலான புகைப்படம்!

நினைத்து பார்க்கமுடியாத விலங்குகள் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சி சாலையில் ஒன்றாக ஓடி விளையாடும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சி சாலையில் தாயால் கைவிடப்பட்ட சைபிரிய புலி, வெள்ளை புலி, கழுத்தைப் புலி மற்றும் ஆப்பிரிக்க சிங்கம் போன்றவை அங்குள்ள நாய்க்குட்டிகளின் தாயால் பாலூட்டப்பட்டு வளர்க்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிடப்பட்ட விலங்குகளும் நாய்குட்டிகளும் ஒன்றாகவே வளர்ந்ததாகவும், அவை தற்போது நெருங்கிய நண்பர்களாகிவிட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கரடிகள், கங்காருக்கள், குரங்குகள் போன்ற கைவிடப்பட்ட பல்வேறு விலங்கினங்களை வளர்த்துள்ளதாக ‘பெய்ஜிங் வைல்டு லைப் பார்க்’ தெரிவித்துள்ளது.

புலி, சிங்கக்குட்டிகளுடன் நாய்க்குட்டி விளையாடும் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

மிருகாட்சியில் இவைகளை பார்த்தும், ரசித்தும் மக்கள் செல்லுக்கின்றனர்… அந்த புகைப்படம் இதோ உங்களுக்காக…