இரண்டாவது சீசன் பிக்பாஸ் வீட்டின் காதலர்கள் என்றால் அது மஹத்-யாஷிகா தான். இருவரும் வெளிப்படையாக காதல் இருப்பதாக தெரிவித்துவிட்டனர்.
ஆனால் மஹத் வீட்டிற்குள் போகும் போதே தனது காதலி இருக்கிறாள் என்று மக்களுக்கு தெரிவித்துவிட்டு தான் சென்றார். திடீரென்று அவர் வீட்டிற்குள் யாஷிகா மீது காதல் என்று சொன்னதும் அவருடைய காதலி பிராசி, மஹத்தை பிரிந்துவிட்டதாக ஒரு பதிவு போட்டார், பின் அதை நீக்கியிருந்தார்.
இந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறிய மஹத் பிக்பாஸில் போட்ட குறும்படத்தை இன்ஸ்டகிராமில் பதிவிட்டு இந்த உலகத்தில் உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என போட்டுள்ளார்.
ரசிகர்கள் இவர் யாரை தான் காதலிக்கிறார் என்று குழம்பி வருகின்றனர்.