திருநங்கையான பாலியல் தொழிலாளி ஒருவர் தனது வாடிக்கையாளரை கொள்ளையர்கள் தாக்கி அவரது காரை திருடியபோது அவரை காப்பாற்றும் முயற்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வனேசா கம்போஸ் என்ற திருநங்கை பாலியல் தொழில் செய்து வந்தார்.மேலும் பிரான்சில் பாலியல் செய்வது சட்டவிரோதமான ஒன்று என்பதால் பாலியல் தொழிலாளிகள் தங்களது வாடிக்கையாளர்களை பூங்காவில் சந்தித்து வந்தனர்.
இவ்வாறு வனேசா தனது வாடிக்கையாளரை சந்திக்க பூங்காவிற்கு சென்றபோது அங்கு சுமார் 10 கொள்ளையர்கள் வாடிக்கையாளரை தாக்கி காரை திருட முயன்றனர்.
இதனை தடுக்க முயற்சி செய்தபோது கொள்ளையர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வனேசாவை சுட்டார்.
இதில் வனேசாவின் நெஞ்சில் குண்டு பாய்ந்து ,உதவி கோரிய நிலையில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளிகள் வநேசாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று எழுதப்பட்ட போஸ்டர்களுடன்பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 8 கொள்ளையர்களை கைது செய்துள்ளனர் .