மலேசியாவில் ஷாப்பிங் மாலில் இளம்பெண் ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து நடந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா சாபா நகரத்தில் கோடா கினபாலு என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஆசியா சிட்டி ஷாப்பிங் மாலில் இளம்பெண் ஒருவர் ஒரு ஆண் நண்பனுடன் உள்ளாடை மட்டும் அணிந்து மிக மோசமான முறையில் நடந்து வந்துள்ளார்.
இதை பார்த்த பலரும் அருவெறுப்பாக முகம் சுளித்துள்ளனர். மேலும் அங்கிருந்த நபர் ஒருவர் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் இதை பார்த்த பலரும் இதற்கு கண்டங்களையும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் கிறிஸ்டினா லியூ, மலேசியாவின் அழகை காண வரும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
ஆனால் நீங்கள் எங்களுடைய கலாசாரத்தை சீர்குலைக்கும் விதமாக ஆடை அணிய வேண்டாம். அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.