மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது வழக்கத்தில் உள்ளது.
இன்றைக்கும் கிராமப்புறங்களில், காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்றும், ஏதோ நல்ல தகவல் வரப்போவதாகவும் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்.
காக்கைபாடினியார் எனும் சங்க காலப் புலவர், காகம் ஏற்படுத்தும் நல்ல சகுனங்களைப் கூறியுள்ளார். அவை, பயனத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன் லாபத்தையும், இடமிருந்து வலம் போவது தன நஷ்டத்தையும் உண்டாக்கும். பயணிக்கும் அன்பரை நோக்கி காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவூட்டும் காட்சி தென்படுமானால் பயணம் இனிதாகும்.
ஒருவருடைய பயணத்தின்போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால் பயணத்தின்போது அவருக்கு அகால மரணம் நேரிடலாம்.
அதே நேரம் பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால் அந்த பயணத்தால் பலவிதமாக தன லாபம் ஏற்படும்.வாகனம், குடை, காலணி ஆகியவற்றின்மீது எச்சம் இட்டால் பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது.
ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால் தன லாபம் மற்றும் பெண்களால் நன்மை உண்டு என அறியலாம்.
காரணமின்றிக் கரைந்து ஒலியெழுப்பும் காகம் பஞ்சம், வரப் போவதையும், காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையையும் இரவில் அசாதாராணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதையும் சகுனமாக அறிவிக்கும்.
ஒருவரின் மேலே படும் காகம் அவருக்கு உடல் உபாதை நேருதலை குறிக்கும்.காகங்கள் கூட்டமாக ஒடு ஊரின் மேலாகப் பறப்பது அவ்வூருக்கு ஏற்பட உள்ள பெரும் ஆபத்தைக் குறிக்கும்.