அரிய வகை பழத்தில் கிடைக்கும் அதிஷ்டம்! ஆராய்ச்சியில் வெளிவந்த அற்புதமான தகவல்

முள் சீத்தா பழம் மகத்துவம் வாய்ந்தது. இந்த பதிவில், புற்றுநோய் முதல் இதய நோய் வரை அனைத்திற்கும் உதவும் முள் சீத்தாவின் முழு மருத்துவ குணங்களையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

முள் சீத்தா பழத்தில் அதிகமான ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது.

புரதம்
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்
கால்சியம்
வைட்டமின் எ
பொட்டாசியம்
இரும்பு சத்து வைட்டமின் பி போன்ற மூல பொருட்கள் உடலை சீராக வைக்க பயன்படுகிறது.
புற்றுநோய் செல்களை அழிக்கும்
பல வருடங்களாக செய்த ஆராய்ச்சியில் ஒரு அற்புதமான தகவல் வெளி வந்துள்ளது.

அதுதான், முள் சீத்தா இலைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளது என்பது. இதில் உள்ள அசிடோஜெனின் (acetogenins), உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை தந்து புற்றுநோய் செல்களை உடலில் வரவிடாமல் காக்கும்.

புற்றுநோய் உள்ளவர்கள் முள் சீத்தா இலைகளை டீ போட்டு குடித்து வந்தால், கீமோதெரபிக்கு சமமானதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இதய நோயை தடுக்கும்
இந்த முள் சீத்தாவில், அதிகமான பொட்டாசியம் உள்ளது. இது இதய பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் காக்கும்.

உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்கும். இந்த முள் சீத்தா இலைகளை டீ போட்டு குடித்தால் இதயம் சார்ந்த கோளாறுகளை தடுக்கலாம். அத்துடன் மன அழுத்தம், மன விரக்தி ஆகியவற்றிற்கும் தீர்வு தரும்.

உடல் எடையை குறைய
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்க செய்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.