இன்றைய ராசிபலன் (29/08/2018)

  • மேஷம்

    மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பழைய கடனைத்தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச் சலுடன் ஆதாயம் தரும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பல வீனத்தை உணர் வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியா பாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடை யின்றி முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலை கள் தடைப்பட்டு முடியும். அநாவ சியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக்கூறுவார். வளைந்து செல்ல வேண்டிய நாள்.

  • கன்னி

    கன்னி: சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிக மாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம்லயிக்கும். வியாபாரத்தை விரிவுப் படுத்து வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • தனுசு

    தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உத வியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

  • மகரம்

    மகரம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக் கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்புலாபம் உண்டு. உத்யோகத்தில்
    அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறை வேறும். வெற்றி பெறும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசு வீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகள் தீரும். உடல் நிலை சீராகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒருவித பயம், படபடப்பு வந்துச் செல்லும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.