பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த வாரம் முதல் கமல்ஹாசன் செயலால் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தற்போது தான் கமல்ஹாசன் சரியாக நடந்து கொள்கிறார் என்ற நெட்டிசன்கள் புகழ தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது கடந்த சீசனை போல பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மும்தாஜின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். அப்போது மும்தாஜ் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.