அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை பார்த்து பதில் பிரதமர் வருகின்றார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நகைச்சுவையாக கூறியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. அமைச்சர்கள் சமுகமளித்திருந்த நிலையில் ஜனாதிபதி கூட்டம் இடம்பெற்ற சபைக்கு வருகை தந்தார். அவருக்கு பின்னால் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் வருகை தந்தபோது அவரைப் பார்த்தே பதில் பிரதமர் வருகின்றார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் கூற்றையடுத்து அமைச்சர்கள் நகைச்சுவையாக சிரித்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமையால் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அமைச்சர்களான அகிலவிராஜ் காரியவசம், மங்கள சமரவீர, தலதா அத்துக்கோரள, தயா கமகே, சாகல ரட்நாயக்க, ஆகியோர் உட்பட பல அமைச்சர்கள் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.