இலங்கையின் உள்நாட்டுப் போரில் தமது கண்களில் ஒன்றை இழந்த அமெரிக்க பெண் ஊடகவியலாளர் மாரி கொல்வினின் உண்மைக்கதையை மையமாக கொண்டு திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது
இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தெ பிரைவெட் வோர் என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கும் போது எதிர்நோக்குகின்ற சவால்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன.
கடந்த 2001ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதியன்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வன்னி, இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும்போது கொல்வின் வெடிச்சம்பவம் ஒன்றில் தமது கண்ணை இழந்தார்.
பின்னர் 2012ஆம் ஆண்டு பெப்ரவரியில் அவர் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த சிரியாவுக்குள் அனுமதியின்றி பிரவேசித்த போது கொல்லப்பட்டார்.