குண்டானவர்களுக்கு……

உடல் பருமனுக்கும் அது தொடர்பான நோய்களுக்கும் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளே காரணம் என்பது தெரியும். எனவே, கெட்ட கொழுப்பைக் குறைக்க எத்தனையோ உடற்பயிற்சிகளையும், உணவுமுறையில் பல மாற்றங்களையும் செய்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த பிரச்னைக்கு விஞ்ஞானிகள் அறிவியல்பூர்வமாக மாற்று முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

நம் உடலுக்குள் இருக்கும் கெட்ட கொழுப்பான Low -density lipoproein(LDL) என்பதை வாழ்க்கைமுறையினை அடிப்படையாக வைத்து மாற்றுவது ஒருபுறம் இருக்கட்டும்.

அதே நேரத்தில் மரபணு மருத்துவம், நானோ ஊசிகள் என பல்வேறு முறையில் இவற்றைக் கட்டுப்படுத்த முடியுமா என்றுதான் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியில் தற்போது மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். தேவையற்ற கெட்ட கொழுப்பினை, நம் உடல் தேவைப்படும் நேரத்தில் நல்ல கொழுப்பாக High density lipoprotein (HDL) மாற்றி பயன்படுத்திக் கொள்ளும்.

இந்த பணியினை உடல் செல்களின் உட்கருவான மைட்டோகாண்ட்ரியா மேற்கொள்கிறது. மைட்டோகாண்ட்ரியாவின் இந்த ஸ்டைலைப் பின்பற்றி, செயற்கையாக மாற்ற முடியுமா என்றுதான் முயற்சி செய்து வந்தார்கள். அதில் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெற்றியும் கண்டுள்ளனர்.

UCP 1 Protein எனும் புரதப் பொருளை, கெட்ட கொழுப்புகள் படிந்துள்ள இடத்தில் ஊசி மூலம் செலுத்தி கெட்ட கொழுப்புகளை நல்ல கொழுப்பாக மாற்றும் செயலைத் தூண்டுகிறார்கள். 3 வார காலத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. எலிகள் மீது நடந்த ஆராய்ச்சியில் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

இதனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அதனால், உடல் பருமனானவர்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை என்ற செய்தியை சொல்லும் அதேநேரத்தில் உணவுக்கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியினையும் விட்டுவிடாதீர்கள் என்று கூறிக்கொள்கிறோம்.