பரிஸ் நகரில் வைத்து கூரியவாட்கள் பெரும் கத்திகள் உட்பட்ட ஆயுதங்களுடன் பிரெஞ்சுகாவற்துறையினால் அதிரடியாக நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ள14 இலங்கை இளைஞர்களின் தடுப்புக்காவல் இன்றும் நீடிக்கபட்டுள்ளதாக தெரிகிறது.சட்டவிரோத ஆயுத பிரயோக முயற்சி குற்றங்களின் அடிப்படையில் இவர்கள் அனைவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் இவர்களின் தாக்குதல் திட்டம் குறித்த புதிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் இடம்பெற்ற மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் பின்னர் குழு மோதல் ஒன்றில் ஈடுபடும் வகையில் இந்த இளைஞர்கள் தயார்படுத்தல்களை செய்யதாகவும் இவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதான அனைவரும் நியூலி சூ மார்ன்(Neuilly-sur-Marne)பகுதியில் வசிக்கும்18 முதல்29 வயதுக்கு உட்பட்ட இலங்கை குடியுரிமையை கொண்ட இளைஞர்கள் என காவற்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழா உற்சவத்தில் சுமார்40.000 மக்கள் கூடியிருந்த நிலையில் திருவிழா முடிந்தபின்னர் தமிழ் இளைஞர்களில் ஒரு பகுதி வன்முறைகளில் ஈடுபட ஆயத்தமாகியதாக குறிப்பிடும் பரிஸ் காவற்துறை,தேர்த்திருவிழாவுக்கு பின்னர் தமிழ் இளைஞர்கள் சிலர் மதுபோதையில் குழு வன்முறைகளில் ஈடுபட்டுவரும் சம்பவங்கள் அண்மைய வருடங்களில் அவதானிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
இந்த இளைஞர்கள் குழுவிடம் இருந்த இரண்டு பைகளில் கூரியவாட்கள் பெரும் கத்திகள் உட்பட்ட ஆயுதங்கள் மட்டுமன்றி கண்ணீர்புகை கருவிகள் இருந்ததாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.