பாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை கரீனா கபூர். இவரின் குடும்பத்தில் பலரும் சினிமாத்துறையை சார்ந்தவர்கள் தான். அதனாலேயே இவர்கள் பெயர் பெற்றவர்கள்.
மும்பையில் 2 ஏக்கர் பரப்பரளவில் இருக்கும் ஆர்.கே.ஸ்டூடியோ 1948 ல் இவரது தாத்தா ராஜ் கபூரால் உருவாக்கப்பட்டது. பல நடிகர்கள், நடிகைகளின் படங்கள் இங்கு தான் எடுக்கப்பட்டது.
எப்போதும் பிசியாக இருக்கும் இந்த ஸ்டூடியோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தீ விபத்தில் சிக்கியது. இதனால் திரையரங்குகள் எரிந்து நாசமாகின.
பூர்வீகமானது மற்றும் தொழில் சம்மந்தப்பட்டது என்பதால் இதனை புதுப்பிக்க பல கோடிகள் செலவாகும் என்றார்களாம். இதனால் கபூர் குடும்பத்தினர் இதை விற்க முடிவு செய்துவிட்டார்கள்.
இது குறித்து பேசியுள்ள கரீனா கபூர் அந்த ஸ்டூடியோ எனக்கு மிகவும் பிடித்தமான இடம். அந்த ஸ்டூடியோவில் நான் சிறுவயதில் அதிகம் விளையாடியிருக்கிறேன்.
விற்க வேண்டும் என குடும்பத்தினர் எடுத்த முடிவு எனக்கு வேதனையாக இருக்கிறது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார்.