வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம் அன்மையில் நடைபெற்ற விடயம் வெளிவந்தது.
இந்த செயலணி கூட்டத்தை புறக்கணிக்கும்படி முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கடிதம் மூலம் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், கூட்டமைப்பு எம்.பிக்கள் அதை நிராகரித்திருந்தனர்.
நடந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளில் இரண்டு பேரைத் தவிர மிகுதி அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் எம்.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் சிவசக்தி ஆனந்தன் எம்.பி ஆகியோரே.
ஈ.பி.ஆர்.எல்.எவ் இந்த செயலணியை புறக்கணித்துள்ளது. அதனால் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொள்ளவில்லை.
“செயலணியை புறக்கணிக்கும்படி விக்னேஸ்வரன் கேட்டார். அவரது ஆலோசனையை, மாணவர் சுமந்திரன் மட்டும்தான் கேட்டிருக்கிறார் போல“ என அரச தரப்பை சேர்ந்த ஒரு வடக்கு எம்.பி நகைச்சுவையாக கேட்டிருக்கிறார்.
இதனால் வெலவெலத்து போன மாவை சேனாதிராசா, “இல்லையில்லை… செயலணியில் பங்குபற்றுவதற் அவசியத்தை பகிரங்கமாகவே கூறிவிட்டாரே.
எம்.பிக்களிற்கான ஆசனம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தபோது, டக்ளஸ் தேவானந்தாவிற்கு பக்கத்தில் விஜயகலா மகேஸ்வரனிற்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
விஜயகலா மகேஸ்வரன் சற்று தாமதமாகவே மண்டபத்திற்கு வந்தார். தனது ஆசனம், டக்ளஸ் தேவானந்தாவிற்கு அடுத்ததாக இருப்பதை அவதானித்து, சிறிது சங்கடப்பட்டார்.
பின்னர், தனது ஆசனத்திற்கு அடுத்ததாக இருந்த செல்வம் அடைக்கலநாதனிடம் “செல்வம், நீங்கள் இடம்மாறி எனது ஆசனத்தில் இருக்கிறீர்களா? நான் உங்கள் ஆசனத்தில் உட்கார்கிறேன்“ என கேட்டார்.
செல்வம் அடைக்கலநாதனும் சம்மதித்து, டக்ளஸிற்கும், விஜயகலாவிற்குமிடையில் உட்கார்ந்தார்.