சந்தனத்தை தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்கினால் என்ன நடக்கும்?

சிலர் வாஸ்து, தோஷங்களை நம்புவார்கள். சிலர் அவற்றை மூடநம்பிக்கை என்று புறந்தள்ளி விடுவார்கள். ஆனால் நம் முன்னோர்கள் கணித்துத் தந்திருக்கும் சில வாஸ்து சாஸ்திரங்களும் தோஷங்களைப் போக்கும் வழிமுறைகளும் ஏராளமாக உள்ளன. அதில் சிலவற்றுக்கு அறிவியல் ரீதியான காரணங்களும்கூட இருக்கும்.சிலர் வாஸ்து, தோஷங்களை நம்புவார்கள்.

சிலர் அவற்றை மூடநம்பிக்கை என்று புறந்தள்ளி விடுவார்கள். ஆனால் நம் முன்னோர்கள் கணித்துத் தந்திருக்கும் சில வாஸ்து சாஸ்திரங்களும் தோஷங்களைப் போக்கும் வழிமுறைகளும் ஏராளமாக உள்ளன.

அதில் சிலவற்றுக்கு அறிவியல் ரீதியான காரணங்களும்கூட இருக்கும்.அப்படி நம்முடைய வாழ்வில் நாம் தைரியம், சாந்தம், வீரம், மனஉறுதி ஆகியவற்றைப் பெற்றிருத்தல் அவசியம். அதற்கு சில பொருட்களை நம்முடைய படுக்கைக்குக் கீழே வைத்துத் தூங்கினால் சிற்நத பலன்கள் கிடைக்குமெனக் கூறப்படுகிறது.

கோபம் குறைய

எதற்கெடுத்தாலும் சிலர் கோபப்படுவதுண்டு. அதுபோன்ற மனிதர்களை சிடுமூஞ்சி என்று குறிப்பிடுவார்கள். இதுபோல் அளவுக்கதிகமாக கோபம் வரும் ஆட்கள் தங்களுடைய படுக்கைக்கு அடியிலோ அல்லது ஓரத்திலோ செம்புப் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

தலையணைக்கு அடியில் சிவப்பு சந்தனக் கட்டை சிறிய துண்டை வைத்துத் தூங்கினாலும் கோபம் கட்டுக்குள் இருக்கும்.

மனஉறுதி மேம்பட

படுக்கைக்கு அடியில் வெள்ளிப் பாத்திரத்தில் நீர் நிரப்பி வைக்க வேண்டும். ஏதேனும் ஒரு வெள்ளி ஆபரணத்தை அணிந்திருப்பது அவசியம். இதன்மூலம் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.தைரியம் அதிகரிக்க

தலையணைக்கு அடியில் தங்கம், அல்லது வெள்ளிப் பொருட்களை கட்டிலுக்கு அருகே வைத்துத் தூங்குங்கள். வேண்டுமானால் வெண்கலப் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்தும் தூங்கலாம்.

அதிர்ஷ்டம் பெருக

எப்போதுமே தங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று வருத்தப்படுகிறீர்களா?

வெள்ளியாலான மீனை தலையணைக்கு அடியில் வைத்தோ அல்லது நீர் நிரப்பிய வெள்ளிப் பாத்திரத்துக்குள் வைத்தோ தூங்குங்கள்.

கண் திருஷ்டி விலக

கண் திருஷ்டி இருக்கிறது என்று எண்ணினால் 21 நாட்களுக்கு தொடர்ந்து இரும்புப் பாத்திரத்தில் நீர் நிரப்பி, கட்டிலுக்கு அருகில் வைத்துத் தூங்குங்கள்.

அதோடு நீல நிறக்கற்களை தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்குங்கள்.இந்த எல்லா செயல்களையும் தொடர்ந்து 21 நாட்களுக்குச் செய்தல் வேண்டும். அப்போது தான் சிறந்த பலனைத் தரும்.