சிம்ரன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த படம் வெற்றி பெரும் என்று தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஒன்ஸ்மோர், நட்புக்காக, பார்த்தேன் ரசித்தேன் ஆகிய படங்களில் வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
மீண்டும் நடிக்க வந்துள்ள சிம்ரன், சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக ‘சீமராஜா’ படத்தில் நடித்துள்ளார். காளீஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்துள்ள சிம்ரனுக்கு தொடர்ந்து வில்லி கதாபாத்திரங்கள் வருகின்றன.
இப்படம் பொன்ராம், சிவகாா்த்திகேயன், சூரி கூட்டணியில் உருவாகிவரும் 3வது படம் சீமராஜா. இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சீமராஜா திரைப்படம் வருகிற செப்டம்பா் 13ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு.