விஜய், அஜித்தை தொடர்ந்து வெளிநாட்டில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

சிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா திரைப்படம் வருகிற செப்டம்பா் 13ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு.

பொன்ராம், சிவகாா்த்திகேயன், சூரி கூட்டணியில் உருவாகிவரும் 3வது படம் சீமராஜா. இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று விட்டதாக சமீபத்தில் படக்குழு தெரிவித்து இருந்தது. மேலும் டப்பிங் பணிகளும் நிறைவு பெற்று விட்டதால், ரசிகா்கள் திரைக்கு வரும் நாளை பெரிதும் எதிா்பாா்த்து உள்ளனர்.

தற்போது, படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டூடியோ நிறுவனம் படம் திரைக்கு வரும் நாளை அறிவித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது விநாயகா் சதுா்த்தி தினமான செப்டம்பா் 13ம் தேதி படம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சீமராஜா திரைப்படம் தற்போது போலந்து நாட்டில் வெளியாக உள்ளது. முதல் முறையாக போலந்து நாட்டில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்.

முன்னணி நடிகர்கள் ரஜினி,விஜய்,அஜித்,சூர்யாவிற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் படம் போலந்து நாட்டில் திரையிடப்பட உள்ளது.இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.