தங்கள் சேவைகளை இணையத்தில் பட்டியலிட்ட இரண்டு பெண் மருத்துவர்கள் பட்டியலில் கருக்கலைப்பையும் சேர்த்ததால் விசாரணைக்குள்ளாகியுள்ளனர்.
ஜேர்மனியைச் சேர்ந்த Natascha Nicklaus மற்றும் Nora Szilard என்னும் இருவரும் மகளிர் நல மருத்துவர்கள். தங்கள் சேவைகளை இணையத்தில் பட்டியலிடும்போது அதில் கருக்கலைப்பும் இருந்ததால், ஆதாயத்திற்காக கருக்கலைப்பை விளம்பரம் செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது கருக்கலைப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் Pro-life campaigners என்னும் அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆனால் மருத்துவர்கள் தரப்பு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பிரிவு ஜேர்மன் அரசியல் சாசனச் சட்டத்தின் பல பிரிவுகளுடன் முரண்படுவதால் அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது.
அதுமட்டுமின்றி சுய ஆதாயத்திற்காக தாங்கள் கருக்கலைப்பை விளம்பரம் செய்யவில்லை என்றும் மருத்துவர்கள் தரப்பு வாதிட்டுள்ளது. தங்கள் நோக்கம் எதிர்பாராமல் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு ஆதரவாக நிற்பதுதான் என்பதை நோயாளிகளுக்கு தெரிவிப்பதே என்று Nicklaus தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி ஒரு பெண் கர்ப்பகாலம் முழுவதும் செலுத்தும் மருத்துவ கட்டணத்தை விட கருக்கலைப்பு செய்வதால் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தங்கள் வழக்கு தோற்குமானால் வழக்கை மேல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.