ஜேர்மனிக்கான சுவிஸ் தூதராக புதிதாக பொறுப்பேற்றுள்ள Paul Seger தனது முதல் உரையை கெமரா முன்பு பதிவு செய்து கொண்டிருந்தார். அவர் அருகே இரண்டு நாட்டுக் கொடிகளும் வைக்கப்பட்டிருந்தன. பெர்லினில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகம் நட்பின் வீடாக இருக்கும் என்றும் சந்திக்கும் இடமாக இருக்கும் என்றும் சுவாரஸ்யமாக அவர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென காற்று வீசியது. அப்போது அவர் அருகே வைக்கப்பட்டிருந்த சுவிஸ் மற்றும் ஜேர்மன் கொடிகள் இரண்டும் காற்றில் சாய்ந்து கீழே விழுந்து விட்டன.
இரண்டு முகியத்துவம் வாய்ந்த கொடிகளும் கீழே மண்ணில் விழும் நிலையில், அதனை கருத்திற் கொள்ளாது அவரோ கொஞ்சமும் யோசிக்காமல், தான் கெமரா முன் நிற்கிறோம், மக்கள் பார்ப்பார்கள் என்றும் கூட சிந்திக்காமல் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். அதை விட கொடுமை என்னவென்றால், அந்த சம்பவத்தை கட் கூட செய்யாமல் அப்படியே ட்விட்டரில் வெளியிட்டுள்ளது தூதரகம். இதைப் பார்த்து அதிர்ச்சியடைவதா அல்லது அவரது நகைச்சுவை உணர்வை எண்ணி சிரிப்பதா என குழம்பி போயுள்ளனர் மக்கள்.