தென் கொரியாவுக்கு தொழிலுக்காக சென்றவர்களுக்கு பிணை கையொப்பமிட்ட அரசாங்க ஊழியர்கள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,
தொழிலுக்காக தென் கொரியா சென்று. வீசா முடிவடைந்த நிலையில் அங்கு தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தங்கியிருபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
தொழிலுக்காக சென்றவர்களுக்கு பிணை கையொப்பமிட்ட அரசாங்க ஊழியர்கள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது மேலாளர் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மோசடியான முறையில் அங்கு தங்கியிருக்கும் உறவினர்களை உடனடியாக நாடு திரும்ப கோருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அழைக்கப்படவில்லை என்றால் கையொப்பமிட்ட நபர் 15 லட்சம் ரூபா செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் பிணை பணத்தை செலுத்தவில்லை என்றால் கையொப்பமிட்டவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்காக சட்டமா அதிபரிடம் கடிதம் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள், அந்த நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சென்று மீண்டும் இலங்கை செல்வதனை உறுதி செய்தால் தண்டனை இன்றி தப்பி கொள்ள முடியும். அவ்வாறானவர்கள் மீண்டும் தொழிலுக்காக கொரியா செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.