பட்டாக்கத்தியுடன் பேருந்தில் மாணவர்கள் செய்த ரகளை…..

சென்னையில் செங்குன்றத்தில் இருந்து பிராட்வே வழியில் வந்த அரசு பேருந்தில் அரசு கல்லூரி மாணவர்கள் பட்டாகத்தியுடன் படிகட்டில் தொங்கி கொண்டு அராஜகம் செய்த காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குறித்த மாணவர்களின் செயலை மோட்டர் சைக்கிளில் பயணித்த ஒருவர் காணொளியாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுருக்கிறார்.

இதை இணையத்தில் பார்த்த மக்கள் அனைவரும் மாணவர்களை திட்டித் தீர்த்துள்ளனர். மேலும் சட்ட முறை ஒழுங்காக செயல்படாததே இதற்கு காரணமாக உள்ளது என்றும், மேலும் நாட்டின் இளைஞர்கள் சட்டத்திற்கு புரம்பான விஷயங்களை செய்வதை தவிர்த்து விட்டு நாட்டின் முன்னேற்ற பாதைக்கு உறுதுணையாக இருங்கள் என்றும் விமர்ச்சித்துள்ளார்கள்.