பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இருந்து அருகில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக், இன்சாப் கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. அவரது தலைமையில் கூட்டணி ஆட்சியும் அமைந்தது.
பின்னர் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்தார். அவை, ஏராளமான அறைகள் கொண்ட பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் வேண்டாம். இரண்டு வேலைக்காரர்கள் மட்டும் போதும்.இரண்டு புல்லட் புரூப் கார்கள் இருந்தால் போதும். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் விமானத்தின் முதல் வகுப்பில் பயணம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், அந்த உத்தரவுக்கு மாறாக அலுவலகத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு இம்ரான் கான் ஹெலிகாப்டரில் சென்றிருப்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.