இந்தியாவின் ஆந்திராவில் மாற்றாந் தந்தை பாலியல் துன்புறுத்தல் அளித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகமணி என்ற பெண்ணுக்கு நாகராஜ் என்பவருடன் திருமணம் ஆன நிலையில் பிரியா பந்த்வனி (20) என்ற மகள் உள்ளார்.
நாகராஜ் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில் அப்பலா ராஜூ என்பவரை நாகமணி இரண்டாவதாக திருமணம் செய்தார்.
அப்பலா ராஜூ – நாகமணி தம்பதிக்கு மகன் உள்ளான்.
இந்நிலையில் பிரியா இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அப்பலா ராஜூ கொடுத்த பாலியல் துன்புறுத்தலால் தான் பிரியா இம்முடிவை எடுத்ததாக நாகமணி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் தலைமறைவாக உள்ள அப்பலா ராஜூவை தேடி வருகிறார்கள்.
இது குறித்து பேசிய நாகமணி, பிரியாவுக்கு சில காலமாகவே ராஜூ பாலியல் தொல்லை கொடுத்தார்.
தன்னை விட்டுவிடும்படி கேட்டும் ராஜூ விடவில்லை, இது குறித்து பிரியா என்னிடம் கூறினார்.
ஆனால் அவரின் எதிர்காலம் கருதி இது குறித்து நான் மெளனமாக இருந்துவிட்டேன்.
இப்போது தான் அது தவறு என புரிகிறது என கூறியுள்ளார்.