உணவுப்பழக்கம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல் இது போன்ற வாழ்க்கைச்சூழல் பழக்கவழக்க முறையினால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட காரணமாகிறது.
மலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க இஞ்சி பெரிதும் உதவியாக உள்ளது.
மேலும் தினமும் காலையில் இஞ்சியை சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருட்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவுகின்றன.
மலச்சிக்கலை போக்க இஞ்சியை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
- இஞ்சியின் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு, நன்றாக மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இதன்மூலம் செரிமானம் மேம்படுத்தப்பட்டு, மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, அதனுடன் சுடுநீரை ஊற்றி, தேன் கலந்து தினமும் 3 டம்ளர் குடித்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்.
- கரும்பு ஜூஸில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, தேன் கலந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கலாம்.
- கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, பின் அதை வடிகட்டி, அதில் தேன் கலந்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
- வெஜிடேபிள் சூப் செய்யும் போது, அதனுடன் இஞ்சியை துருவி அதனுடன் சேர்த்து குடித்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்.