நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்கள், ரசிகைகள் பெருகிவிட்டார்கள். ஏற்கனவே அவர் டிவி நிகழ்ச்சி மூலம் பல மனங்களை ஈர்த்துவிட்டார்.
அவரின் நடிப்பில் சீமராஜா படம் வரும் செப்டம்பர் 13 ல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவர் தன் நண்பன் அருண்ராஜா காமராஜா இயக்கிய கனா படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை அவரும் அவரின் மகள் ஆராதனாவும் இணைந்து பாடியுள்ளனர். அண்மையில் வெளியான அந்த வீடியோ பலரையும் ஈர்த்தது.
இந்நிலையில் இப்பாடல் வெளியான 117 மணிநேரத்தில் 1 கோடி பார்வைகளை தாண்டியுள்ளதாம்.