திரைப்பட பாணியில் கசமுசா வேலை செய்ய நினைத்த வாலிபர்.! பெண் கூச்சலிட்டதால் தப்பி ஓட்டம்.!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி காமாட்சி வயது24. காமாட்சி வழக்கம் போல வீட்டின் முன்பு துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நரியூத்து பகுதியை சார்ந்த மாரிமுத்து என்பவர் காமாட்சியிடம் நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்றும் அதற்கு பணம் தருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான காமாட்சி மாரிமுத்துவை திட்டி அங்கிருந்து காமாட்சி செல்ல முயன்றார். அப்போது அவரை வழிமறித்த மாரிமுத்து தகராறில் ஈடுபட்டார்.

தனது ஆசைக்கு நீ இணங்காவிட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டிஉள்ளார். இருந்தபோதும் காமாட்சி வீட்டிற்குள் செல்ல முயன்றார். அவரை விரட்டி சென்ற மாரிமுத்து இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். காமாட்சி திடீரென பலமாக சத்தம் போடவே அங்குள்ள அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். இதனைக் கண்ட மாரிமுத்து பதறிப்போய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து கடமலைக்குண்டு காவல் துறையினர் இடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மாரிமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர்.