நடிகை சித்ரா 1965ஆம் ஆண்டு கேரளாவின் கொச்சியில் பிறந்தவர். இவர் 1975ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சேரன் பாண்டியன், சின்னவர், பொண்டாட்டி ராஜ்ஜியம், திருப்புமுனை, என் தங்கச்சி படிச்சவ, ஊர் காவலன் என பல தமிழ் படங்களில் நடித்தார்.
இவருக்கு நல்லெண்ணெய் சித்ரா என்ற ஒரு பெயரும் உள்ளது. நல்லெண்ணெய் கம்பெனியின் விளம்பரத்தில் நடித்து புகழ்பெற்றதால் இவருக்கு இந்த பெயர் வந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவது இயல்பு. அது போல இவர்கள் வாழ்க்கையிலும் வந்தது, கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் 2002-ல் பிரிந்து விட்டனர்.
சித்ராவிற்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறார் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சென்னை சாலிகிராம் நகரில் தனது வீட்டிற்கு எதிரில் ஒரு ஹோட்டல் துவங்கி உள்ளார்.