பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தானாம்!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்ற தகவல் கசிந்துள்ளது. பிக்பாஸ் 2 வீட்டில் கமல் தாளிச்ச கையோடு மகத்தை அனுப்பி வைத்தார். மகத் வெளியேற்றப்பட்டதை பார்த்த பார்வையாளர்களோ கையோடு அந்த பய டேனியையும் அனுப்பி வைக்கலாம் பிக் பாஸ் என்றனர். இந்நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் குறித்த தகவல் கசிந்துள்ளது.

மகத்தை திட்டம் போட்டு விரட்டிவிட்ட ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோரை ஒரே நேரத்தில் வெளியே அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் பார்வையாளர்கள். ஆனால் ஐஸ்வர்யாவை பிக் பாஸ் அவ்வளவு சீக்கிரம் வெளியேற்ற மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஐஸுக்கு தோழி என்பதால் பிக் பாஸின் பாச வளையத்தில் உள்ளார் யாஷிகா.

அநியாயத்திற்கு புறம் பேசி, சண்டை இழுத்துவிடும் டேனியை வெளியே அனுப்புமாறு பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். கமல் கையில் டேனியல் என்று எழுதியிருக்கும் எவிக்ஷன் கார்டை டிசைன் செய்து சமூத வலைதளங்களில் சுற்றவிட்டுள்ளனர். டேனி வெளியேறினால் வீடு அமைதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்வையாளர்கள் யாரையாவது நினைத்தால் அதற்கு நேர் எதிராக வேறு யாரையாவது வெளியேற்றி நம்மை ஏமாற்றம் அடையச் செய்வதை வேலையாக வைத்துள்ளார் பிக் பாஸ். ஆனால் மகத் விஷயத்தில் நாம் எதிர்பார்த்தபடியே அனுப்பி வைத்துவிட்டார். இந்நிலையில் மீண்டும் பார்வையாளர்களை குஷிபடுத்திப் பார்ப்பது என்று முடிவு செய்துள்ளாராம் பிக் பாஸ்.

இந்த வாரம் டேனியை வெளியேற்றப் போகிறார் பிக் பாஸ் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. டேனி வெளியே போய்விட்டால் கோள்மூட்டி வேலையை யார் பார்ப்பது?. ரித்விகா, மும்தாஜுக்கு இடையே தான் கடும் போட்டியாக உள்ளது. மும்தாஜுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதை போட்டியாளர்கள் யூகித்துவிட்டனர். மக்களிடம் உங்களுக்கு தான் அதிகம் ஆதரவு உள்ளது என்று ஜனனி கூட மும்தாஜிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.