மகள் கண்முன்னே மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்! கடவுள் கூறியது என்ன?

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய மகள் கண் முன்னே கட்டிய மனைவியை மிகவும் கொடூரமாக தலையை வெட்டி, கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை எப்படுதியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் வசித்து வருபவர் டிம்மோதி பால் (32). இவருக்கு வநீசா காஸ் என்கிற மனைவியும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை டிம்மோதி தன்னுடயை மனைவியின் கழுத்தை திடீர் என அறுத்து கொலை செய்தார். இதனால் இவரை பொலிசார் கைது செய்தனர்.

இவரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் ஒரு பதிலை கொடுத்துள்ளார். தன்னுடைய மனைவியை கொலை செய்து விடுமாறு கடவுள் கூறியதால் மட்டுமே அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடவுளின் வார்த்தைகளை அவள் பின்பற்றவில்லை என்றும், இதனால் கடவுள் தன்னிடம் அவர் பரிதாபத்திற்குரியவள் இல்லை அவளை கொலை செய்து விடுமாறு கூறினார். அதனால் மட்டுமே தன்னுடைய மனைவியை கொலை செய்ததாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து கொலையை நேரில் பார்த்த குழந்தை கூறியபோது, தன்னுடைய தந்தை ஒரு பெரிய கத்தியை வைத்து அம்மாவை வெட்டினார். அப்போது அம்மாவின் கண்கள் மூடிய நிலையிலும், முகத்தில் இரத்தம் வடித்த நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய தாயின் கொலையை நேருக்கு நேராக இவர் பார்த்தால், மன ரீதியாக மிகவும் இவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இவருக்கு மருத்துவ குழுவினர் முறையான கவுன்சிலிங் கொடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.