ஆவி நகரமாக மாறிப்போன சுவிஸ் விமான நிலையம்!

சுவிஸ் விமான நிறுவனமான SkyWork திவாலானதால் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இதனால் Bern விமான நிலையமே வெறிச்சோடிப்போனது.

இதன் காரணமாக ஏற்கனவே டிக்கெட் வாங்கி வைத்திருக்கும் 11,000 பயணிகளும் 100 விமான ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Bernஐ மையமாகக் கொண்டு செயல்படும் SkyWork விமான நிறுவனம் ஐரோப்பாவிலுள்ள 22 இடங்களுக்கு விமான சேவையை நடத்தி வந்தது.

பல கூட்டாளர்களுடன் இணைந்து தனது பணப் பிரச்சினையை தீர்க்க முயன்றும் முடியாததால் தனது சேவைகளை நிறுத்திக் கொள்வதாக அது செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பெடரல் சிவில் விமான போக்குவரத்து அலுவலகம் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான டிக்கெட்களின் பணத்தைத் திரும்பப் பெற விரும்பும் பயணிகளுக்கான தகவலை வெளியிட்டிருந்தது.

Bern விமான நிலையம் ஒரு ஆவி நகரம்போல் காட்சியளிப்பதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SkyWork விமான நிறுவனத்தின் விமானங்கள் இல்லாததால் வெறிச்சோடிப்போன விமான நிலையத்தை மீண்டும் செயல்படச் செய்வதற்காக பல விமான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.