திருமணமான 4 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் வெளிநாட்டில் உள்ள கணவரிடம் வீடியோ காலில் பேசியபடி புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் வித்யுத்நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் ராவ். இவரது மகள் அருணாதேவி. இவருக்கும் அதே மண்டலம் யானம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் பெருமாள் என்பவருக்கும் கடந்த மே மாதம் 5-ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 25 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி, 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மகள் வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர். திருமணமான ஒரு மாதத்திலேயே வெங்கடேஷ் பெருமாள் லண்டனில் வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் வீட்டில் விட்டு விட்டு, தனது தந்தை காமேஸ்வர ராவ், தாய் அம்மாஜி ஆகியோரை தன்னுடன் அழைத்து சென்று விட்டார். இந்நிலையில் அருணாதேவி தினமும் தனது கணவருக்கு போன் செய்து, என்னை எப்போது பாரிஸ் நகருக்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டு வந்துள்ளார்.
அதற்கு வெங்கடேஷ் பெருமாள், உன்னை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் எனக்கு 20 சென்ட் நிலமும், 10 லட்சம் ரொக்கமும் கொடுக்க வேண்டும் என கூறினாராம். இதைக்கேட்ட அருணாதேவி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது என்னை அழைத்து செல்லாவிட்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி அழுதுள்ளார். ஆனால், வெங்கடேஷ் பெருமாள், தான் கேட்ட நிலம், பணம் கொடுத்தால்தான் அழைத்து செல்வேன் என உறுதியாக கூறியுள்ளார்.
இதனால் மேலும் வேதனை அடைந்த அருணாதேவி, கணவருடன் பேசியபடியே அறைக்கு சென்று அவரது கண்ணெதிரே தூக்கு போட்டுள்ளார்.