ஒரு கைப்பிடி முந்திரி பருப்பு!

முந்திரி பருப்பின் சுவை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். முந்திரி பருப்பில் உள்ள ஓமேகா 3 ஆல்பா லினோலிக் அமிலம் மற்றும் மோனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் போன்ற சத்துக்களோடு இதில் எண்ணற்ற விட்டமின்களும் தாதுக்களும் அடங்கியுள்ளன.

இப்படி நிறைய நன்மைகளை தந்தாலும் இது அதிக கலோரி கொண்டுள்ளதால் உடல் எடையை அதிகரிக்குமோ என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருந்து வருகிறது.இதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நமது இதயத்திற்கு சிறந்தது.

இதில் அதிகளவில் புரோட்டீன் இருப்பதால் ஒரு நாள் முழுவதும் நீங்கள் களைப்படையாமல் உற்சாகமாக இருப்பீர்கள்.இதில் அதிகளவில் ட்ரைப்டோபோஃன் அமினோ அமிலம் இருப்பதால் இவை செரோடோனின் சுரப்பை தூண்டி மனநிலையை அமைதியாக்குகிறது.

மேலும் ஹார்மோனை சமநிலையாக்கி, மெட்டா பாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியமான உடல் நலனை காக்க உதவுகிறது.எனவே இதை நாள் முழுவதும் கூட சிற்றுண்டியாக எடுத்து உங்கள் வயிற்று பசியை போக்கலாம்.
இதில் உள்ள காப்பர் மற்றும் இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும், ஆரோக்கியமான எலும்பிற்கும், உடற் செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

இதில் உள்ள லுடின் மற்றும் ஜேக்ஸாந்த்தின் பொருள் வெளிச்சத்தால் கண்கள் பாதிப்படையாமல் காக்கிறது. அதே நேரத்தில் கண்புரை வராமல் தடுக்கிறது.உடல் எடை 1 அவுன்ஸ் பச்சை முந்திரி பருப்பில் 155 கலோரிகள் உள்ளன. எனவே இதை சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது நம்மளுக்கு அதிகளவில் உடல் எடை கூட வாய்பில்லை.

மருத்துவ எக்ஸ்பட்ஸ் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு போதும் உங்களுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்க என்கிறார்கள்.

மற்ற வால்நட்ஸ், பாதாம், உலர்ந்த திராட்சை பழங்களை ஒப்பிடும் போது முந்திரி பருப்பு அந்த அளவுக்கு பாதிப்பை உடல் எடையில் ஏற்படுத்துவதில்லை. பெண்கள் ஒரு அவுன்ஸ் (4 கிராம்) அல்லது 10% அளவு பெண்கள் தினமும் இதை எடுத்துக் கொண்டு வந்தால் பசியை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
உணவில் உப்பு சேர்த்து வறுக்கப்பட்ட முந்திரி பருப்பிற்கு பதிலாக லேசாக வெறுமனே வறுக்கப்பட்ட முந்திரி பருப்பு நல்லது. நொறுக்கு தீனிகளில் சேர்க்கப்படும் விலங்கு கொழுப்புகள் புரோட்டீனுக்கு பதிலாக முந்திரி பருப்பை ஸ்நாக்ஸ் ஆக எடுப்பது சிறந்தது.

எவ்வளவு சாப்பிடலாம்?
நீங்கள் உங்கள் உணவில் முந்திரி பருப்பை சேர்க்க நினைத்தால் ஒரு கைப்பிடியளவு பச்சையாக முந்திரி பருப்பை எடுக்கலாம்.அப்படி இல்லையென்றால் சைடிஸாக உணவில் சேர்த்தல், பச்சை பீன்ஸ், சாலட்ஸ், பாயாசம் போன்றவற்றில் சேர்த்து கூட முந்திரி பருப்பின் முழு நன்மைகளையும் பெறலாம்.

எனவே நீங்கள் சரியான அளவில் முந்திரி பருப்பை எடுத்து வருவதன் மூலம் உங்கள் உடல் எடையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பை எடுத்தாலே போதும் உங்கள் உடல் எடையை உங்கள் கைக்குள் வைத்து அசத்தலாம்.