இன்டர்நெட் பரவத் தொடங்கியதும் உலகம் என்பது சிறு நொடிகளுக்குள்ளாகச் சுருங்கிவிட்டது. உலகின் எந்த மூலையில் இருப்போரையும் நினைத்தவுடன் தொடர்பு கொண்டுவிட முடியும். இப்படி நிறைய நன்மைகள் இருக்கின்றன.
இந்த இன்டர்நெட்டில், நல்ல விஷயங்களை எவ்வளவுக்கு எவ்வளவு பரப்புகிறார்களோ அதைவிட அதிகமாக சமூகத்தை சீர்குலைக்கும் விஷயங்களும் உலவுகின்றன.
ஏன் நாம் எவ்வளவு கவனமாக இன்டர்நெட்டைப் பயன்படுத்தினாலும், நம்முடைய தகவல்களை மறைத்தோ அழித்தோ வைத்தாலும் மிக எளிமையாக ஹேக் செய்து எடுத்துவிடுகிறார்கள். அதைத் தவறாகவும் பயன்படுத்துகிறார்கள்.ஆனால், இன்டர்நெட்டில் நாம் பயன்படுத்திய, நாம் பார்த்த சில தகவல்களை முழுமையாக யாருக்கும் தெரியாமலும் யாரும் எடுத்துப் பயன்படுத்த முடியாதபடியும் நிரந்தரமாக நீக்கிவிடவும் முடியும்.
சுவீடனைச் சேர்ந்த இரண்டு சாப்ஃட்வேர் டெவலப்பர்கள் இதற்கென தனி இணையதளம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.இந்த இணையதளத்தை பயன்படுத்த நமக்கு கூகுள் அக்கவுண்ட் இருந்தாலே போதும்.
நம்முடைய கூகுள் மெயிலை திறந்து வைத்துவிட்டு அந்த இணையதளத்திற்குள் சென்றோமானால் நாம் இதுவரை பயன்படுத்தியுள்ள அத்தனை தரவுகளும் இருக்குமிடங்களையும் நம்முடைய தொடர்பான, நாம் இதுவரை இன்டர்நெட்டில் பார்த்த அத்தனை பக்கங்களையும் பட்டியலிட்டுக் காட்டிவிடும்.அவற்றில் எவற்றை இன்டர்நெட்டில் வைத்திருக்கலாம், எதையெல்லாம் யாருக்கும் தெரியாமல் நிரந்தரமாக நீக்கலாம் என்ற ஆப்சன்களும் இருக்கும்.
அவற்றில் நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்து அழித்துவிடலாம்.குறிப்பாக, இதில் நாம் பயன்படுத்திய ஆப் முதல் இணையதளங்கள் வரை அத்தனையையும் பட்டியலிட்டுக் காட்டிவிடும்.
இந்த இணையதளத்தை ஃபேஸ்புக் போன்றவற்றிலும் பயன்படுத்தி நம்மால் அத்தனை விவரங்களையும் கூட கண்டுபிடித்துக் கொள்ள முடியும்.
இந்த இணையதளத்தின் பெயரை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அந்த இணையதளத்தின் பெயர் www.deseat.me என்பதாகும்.