இந்த சூப் சக்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

இன்றைக்கு சக்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதைவிட இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இது சக்கரை நோயுடன் இன்னபிற உபாதைகளையும் அழைத்து வருவதால் சக்கரை என்று ஆரம்பித்தாலே பலருக்கும் பயம் தொற்றிக் கொள்கிறது.

அதைவிட சக்கரை நோய் வந்தால் போகும் அல்லது குணமாகும் நோயல்ல தொடர்ந்து சக்கரையை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.சக்கரையை நேரடியாக சாப்பிட்டால் தான் என்றல்ல,

நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் சக்கரை இருக்கிறது என்று வேறு பீதியைக் கிளப்பி விட, எந்த உணவைப் பார்த்தாலும் இதைச் சாப்பிடலாமா? இதைச் சாப்பிட்டால் சக்கரை அளவு அதிகரிக்குமா என்ற கேள்வி நம்மை குடைந்து கொண்டேயிருக்கிறது.

தக்காளிப் பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிரம்பியிருக்கிறது.

கண்களுக்கு மிகவும் நல்லதான வைட்டமின் ஏ சத்தினை அதிக உணவுகளில் பெற முடியாது. அதேபோல் வைட்டமின் கே சத்தும் அரிதான ஒன்று. இந்த வைட்டமின் இரத்தக் கசிவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

 

இப்பழத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், தனியே சாப்பிட்டாலும், சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிட்டாலும் அதன் சத்து குறைவதே இல்லை.இப்பழத்தை வேக வைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம், சாறுபிழிந்தும் பருகலாம். நல்ல பலனைத் தரும்.தக்காளியில் பல வகைகள் உண்டு

ஏன் முக்கியம்?

உணவில் சக்கரை அளவு சரி பார்க்கும் போது கார்போஹைட்ரேட் அளவு சரிபாக்க வேண்டியது மிகவும் அவசியம். கார்போஹைட்ரேட் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது சக்கரையில் உள்ள குளுக்கோஸை உடைக்கும் வேலையைச் செய்கிறது.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் எனர்ஜி என்பது மிகவும் அவசியமான ஒன்று.

எவ்வளவு எடுக்கலாம்?

ஒரு நாளைக்கு சராசரியாக நீங்கள்1500 கலோரி வரை எடுத்துக் கொண்டால் போதுமானது. நீங்கள் சாப்பிடும் உணவுகள், ஸ்நாக்ஸ் எல்லாமே இதில் அடக்கம் என்பதை மறக்க வேண்டாம்.

ஒரு கிராம் கார்போஹைட்ரேட்டில் 4 கலோரி கிடைக்கும். அப்படியென்றால் நீங்கள் 600லிருந்து 900 கிராம் அளவு கார்போஹைட்ரேட் எடுக்கலாம். அன்றைக்கு கூடுதலாக ஏதேனும் இனிப்பு பண்டங்கள் சாப்பிட நேரந்தால் இந்த அளவை குறைத்துக் கொள்வது நலம்.

தக்காளி இனிப்புச் சுவை கொடுத்தாலும் இது சர்க்கரை அதிகமிருக்கும் உணவுப்பொருள் கிடையாது. சாதரணமாக ஒரு கப் தக்காளியில் முப்பது கலோரி, ஏழு கிராம் கார்ப்ஸ்,நாலு கிராம் சர்க்கரை மற்றும் இரண்டு கிராம் ஃபைபர் இருக்கிறது.

ஒரு கப் தக்காளியை நீங்கள் எடுத்துக்கொள்வதால் ஒரு ஸ்பூன் சர்க்கரை எடுத்துக் கொள்வதற்குச் சமம்.

தக்காளியில் சர்க்கரை இருக்கும் அதே நேரத்தில் நார்ச்சத்தும் இருக்கிறது. இது தக்காளியை எளிதில் ஜீரணமாக்க வைக்கிறது. அத்துடன் உங்களுக்கு எனர்ஜியும் கிடைத்திடும். நேரடியான இனிப்பு பண்டங்களிலிருந்து கிடைக்கும் சர்க்கரையை விட இது ஆரோக்கியமானது. அவை நம் ரத்தச் சர்க்கரையளவை உயர்த்துவது போல தக்காளி செய்வதில்லை.

சர்க்கரை நோயாளிகளே…

நீங்கள் தாரளமாக தக்காளியை உங்கள் உணவில் சேர்க்கலாம். இதிலிருந்து கிடைக்ககூடிய சர்க்கரையின் அளவை விட பிறச் சத்துக்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

இதனைச் செய்யாதீர்கள்

தக்காளி இனிப்பு சுவையுடன் லேசான புளிப்புச் சுவையையும் கொண்டிருக்கும். அதனால் சுவையை அதிகரிக்கிறேன் என்று சொல்லி நீங்கள் சேர்க்ககூடிய கூடுதல் பொருட்களால் ரத்தச் சர்க்கரையளவு அதிகரிக்கலாம்.

தக்காளியை ஜூஸாக எடுத்துக் குடிப்பதை முடிந்தளவு தவிர்க்கவும், ஏனென்றால் இதில் கூடுதல் இனிப்பிற்காக செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்படும். தக்காளி சூப் குடிக்கலாம்.