சென்னை போரூரை அடுத்தள்ள குன்றத்தூர் மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரர் கோயில் நகரைச் சேர்ந்தவர் விஜய் என்ற விஜயகுமார். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் மற்றும் கார்னிலா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜய் அங்கு உள்ள தனியார் வங்கியில் வீட்டுவசதிகடன் பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த விஜய், வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழிட்டு கதவு பூட்டாமல் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அபிராமியின் இரு சக்கர வாகனத்தை தேடிவிட்டு வாகனம் காணவில்லை என்பதால் அவர் பேரதிர்ச்சிக்கு உள்ளனர்.
இதனையடுத்து தனது மனைவிக்கு விஜய் பலமுறை தொடர்புகொண்டுள்ளார். அவரது தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததை அடுத்து, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
தனது மகன் மற்றும் மகள் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருவரும் சடலமாக கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியில் பெரும் சத்தத்துடன் கூச்சலிட்டார். இவரின் கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறியபடி ஓடிவந்தனர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குன்றத்தூர் காவல் ஆய்வாளர் திரு.சார்லஸ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சாண்டியப்பன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் குன்றத்தூர் – போரூர் நெடுஞ்சாலையில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்திடம் அபிராமி நெருக்கமாக பழகி வந்தது தெரியவந்தது. சுந்தரத்தை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இரண்டு குழந்தை மற்றும் கணவன் ஆகிய மூன்று பேரையும் கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்தது.
அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டபடி, நேற்று இரவு சுந்தரத்தின் மூலமாக விஷம் வாங்கி வரப்பட்டு தேனீர் மற்றும் உணவில் விஷத்தை கலந்து வைத்து அபிராமி அவரின் குழந்தைகளை சாப்பிடும் படி கூறி பரிமாறியுள்ளார்.
திட்டத்தின் படி எதிர்பாராதவிதமாக கணவர் விஜய்க்கு அலுவலகத்தில் இரவு வேலை இருந்ததால் விஜய் காலையில் வீட்டிற்கு வருவதாக அலைபேசியில் கூறியிருந்தனர். அவரது கணவருக்கு விஷம் தயாராக இருந்த நிலையில், இரவு நேர பணியால் மனைவியின் திட்டத்தில் இருந்து தப்பினார்.
குழந்தைகள் இருவரும் துடிதுடித்து இறந்த பின்னர் யாருக்கும் தெரியாமல் நேற்று இரவோடு இரவாக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு சென்று அங்கிருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் சென்றுவிட்டார்.
அபிராமி நாகர்கோவிலுக்கு போய் சேர்ந்த பின்னர் திட்டமிட்டபடி இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். ஆனால், இங்குள்ள நிலவரத்தை கண்காணித்து கொண்டு இருந்த சுந்தரத்தை காவல் துறையினர் பிடித்துவிட்டனர். தலைமறைவாக உள்ள அபிராமியை கைது செய்ய தனிப்படை காவல் துறையினர் நாகர்கோவிலுக்கு விரைந்து சென்றனர்.
அங்கு நேற்று அபிராமியை கைது செய்துள்ளனர். கைது செய்த பிறகு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது அவர் கூறிய தகவல் இன்னும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பெற்று வளர்த்த குழந்தைகளை கள்ளக்காதலுக்கு கொடூரமாக பலிகடாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த நிலையில் அவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்ததாக கூறியுள்ளார். மேலும் இரவு நேர பணியால் தான் கணவரும் உயிர் தப்பியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளார்.
அபிராமி இறுதியாக தனது குழந்தைகளுடன் எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் சுற்றி இருக்கும் உறவினர்கள் அருகில் நின்று தனது குழந்தையுடன் பாசமாக செல்பி எடுப்பது போன்று அமைந்திருக்கிறது.
ஆனால் காமம் என்று ஒன்று உள்ளே குடி புகுந்ததினால், இவ்வளவு பாசமாக பார்த்துக்கொண்ட தனது குழந்தியையே கொல்லும் அளவிற்கு துணிந்துள்ளாள் ஒரு தாய்.