மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த பாஜக எம்பி

குஜராத்தின் படான் தொகுதியில் இருந்து MP தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி. லீலாதர் வகேலா (வயது 83). இவர் தினமும் காலை நடைப்பயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே செல்வது வழக்கம். அதே போல சம்பவத்தன்றும் நடைப்பயிற்சிக்கு சென்ற அவரை தெருவில் சுற்றி திரிந்த பசு ஒன்று தாக்க முற்பட்டது.

இதைபார்த்து சுதாரித்துக் கொண்ட அவர் தனது கைக்குட்டையால் பசுவை விரட்ட முயற்சித்தார். அதிலும் பின்வாங்காத பசு மாடு, முட்டியதில் நிலைகுலைந்த MP  தூக்கி வீசப்பட்டார். இதனால் அவருக்கு இரு இடுப்பு எலும்புகள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்து பார்த்தவர்கள் மாட்டை விரட்டியடித்து விட்டு MP யை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். தற்போது MP லீலாதர் வகேலா காந்தி நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.